இந்த திரைப்படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து ஹிந்தி , தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள்.
பழங்குடி மக்களுக்கான நிலப் பிரச்சினையை மையப்படுத்தி பண்பாட்டுக் கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், 400 கோடியினை வசூல் செய்தது. அதேவேளை நேற்று இரவு ஹிந்தி மொழியை தவிர மற்ற மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் 'வராஹ ரூபம்' என்ற பாடல் தங்களின் பாடலை திருடி உருவாக்கப்பட்டதாக, தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற குழுவினர் புகாரளித்திருந்தார்கள். அந்த விடயம் சர்ச்சையான நிலையில் ஓடிடியில் வெளியான இந்த திரைப்படத்தில் 'வராஹ ரூபம்' பாடல் நீக்கப்பட்டு, அதற்குப் பிறகு வேறு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓடிடியில் படம் பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.