நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினமான முதலை மிகுந்த ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். இத்தகைய முதலைகளின் தாக்குதல்கள் மிக வேகமாகவே மனிதர்களை அதன் பிடிக்குள் சிக்கவைத்துவிடும்.
இந்த முதியவர் வாய்க்கால் போன்ற இடத்தில் இருந்த முதலை ஒன்றை பிடிக்க முயற்சித்து அதன் முகப் பகுதியில் ஒரு துணியை வீசி கண்களை மறைத்து , முதலைக்கு பின்னால் சென்று அதனை பிடிக்க முயற்சி செய்திருக்கின்றார்.
ஆனால் முதலையை தொட்ட அடுத்த நொடி அது அந்த துணியை உதறித்தள்ளி முதியவரை தரையில் வீழ்த்தி அவரைத் தாக்க முயற்சித்துள்ளதுடன் இதனை சற்றும் எதிர்பாராத அந்த முதியவர் தன்னை சுதாரித்துக்கொண்டு முதலையிடம் இருந்து தப்பியுள்ளார்.
குறித்த இந்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான மோதல் குறித்த விழிப்புணர்வு தீவிரமாக பரப்பப்படும் இந்த காலத்தில் உரிய பாதுகாப்பு இல்லாமல் முதலையை துணியை வீசி அதனை சாதாரணமாக பிடிக்க முயன்ற அந்த முதியவரைப் பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.