Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
மலேசியாவின் 10வது பிரதமராக பதவியேற்றார் அன்வார் இப்ராகிம்!

Sooriyan FM Gossip - மலேசியாவின் 10வது பிரதமராக பதவியேற்றார் அன்வார் இப்ராகிம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views
மலேசியாவின் புதிய பிரதமராக 75 வயதான அன்வார் இப்ராகிம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அண்மையில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சீர்திருத்தவாத தலைவர் அன்வார் இப்ராகிமை, புதிய பிரதமராக மலேசிய மன்னர் நியமித்ததை அடுத்து, நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றார்.

மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 15-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. 75 வயதான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி, சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களை வென்றது.

இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக மலாய் இனத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 72 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இந்த நிலையில், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, அன்வார் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது.

மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்றார். முன்னதாக, அன்வார் 1998 இல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை என்று அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் அன்வார் இப்ராஹிம்மிற்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top