இம்முறை கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளில் தொடரை நடத்தும் நாடான கட்டார் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
நேற்றைய தினம் செனகல் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக கட்டார் அணி தொடரில் இருந்து வெளியாகியுள்ளது.
A பிரிவிலுள்ள நெதர்லாந்து மற்றும் ஈக்குவடோர் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களிலுள்ள இதேவேளை செனகல் அணி 3 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த கட்டார் அணி A பிரிவில் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் எதனையும் பெறாது இறுதி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.