இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து "வை ராஜா வை" படத்தையும் இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்திருந்தனர்.
தொடர்ந்து பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தற்போது "லால் சலாம்" என்ற புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
"லால் சலாம்" 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள நிலையில் இதன் first look போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஈடுபட்டுள்ளார். இவரின் இசையை கேட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருக்கு சலாம் செய்கிறார். இந்த வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வெளியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.