நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்கியுள்ள துணிவு திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகரும் தாயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ள நிலையில், அமெரிக்க வெளியீட்டு உரிமத்தை சரிகம சினிமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது, சமீபத்தில் இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருந்தது.அதுமட்டுமின்றி துணிவு திரைப்படத்திற்கு போட்டியாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பதால் , இந்த இரண்டு திரைப்படத்திற்குமான ப்ரொமோஷன்கள் இனி வரும் நாட்களில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முன்பெல்லாம் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவதே அபூர்வமாக இருந்தது . ஆனால் தற்போது 'வலிமை' திரைப்படத்திற்கு பின்பு தொடர்ந்து அஜித்தின்அதிகமன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதுவும் இப்போது அஜித் தனது இரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வெளியாகி வருகிறது.தற்போது அஜித் வெளியிட்டு இருக்கும் கிளீன் சேவ் செய்திருக்கும் புகைப்படம் இரசிகர்களை பெருமளவு கவர்ந்திருப்பதோடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.