சீனாவிலுள்ள உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் வயிற்றில் இருந்து சுமார் 3 கிலோகிராமிற்கும் மேலதிகமான தலைமுடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
குறித்த சிறுமி உணவு உட்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவதாகவும் அவரின் தலைமுடி கொட்டியதனால் வழுக்கைத் தலையாக மாறியதாலும் அவரின் தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் 3 கிலோகிராமிற்கும் அதிகமான நிறை கொண்ட தலைமுடியை அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் வைத்தியர்களை மாத்திரமின்றி தற்போது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறுமியின் வயிற்றுக்குள் முடி இருந்ததன் காரணமாகவே உணவு உட்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த மருத்துவர்கள் அந்த சிறுமி தனது தலைமுடியை தானே சாப்பிட்டதாகவும் அதிர்ச்சிகரமான உண்மையினை தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த முடி அகற்றப்பட்ட பிறகு சிறுமிக்கு மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறுமிக்கு இருக்கும் இந்த விநோத பழக்கவழக்கத்தில் இருந்து மீட்பதற்கான உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.