நேர்க்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்,H.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது.
அஜித்தின் 61-வது படமான இந்தப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜிப்ரன் இசையமைக்கிறார்.இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து துணிவு படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் இன்று வெளியாகும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.பின்னர் பாடல் இன்று 6.30 மணிக்கு வெளியாவதாக புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.