இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள "வாரிசு" திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.
ஏதிர்வரும் 12 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் "ரஞ்சிதமே","தீ தளபதி" மற்றும் "சோல் ஆப் வாரிசு"பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
வாரிசு திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. அந்த முன்னோட்டத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், "வாரிசு" திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி 10மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.