ஆண் குழந்தையொன்றையும் பெண் குழந்தையொன்றையும் இவர்கள் பெற்றெடுத்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் பிறந்தவுடன் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இரண்டு குழந்தைகளையும் முதலுதவி சிகிச்சைகளுக்காக எடுத்துச் சென்றதுடன் யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை ஊழியர்கள் பதிவு செய்ய மறந்துள்ளனர். குறித்த முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் எந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பம் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் குழந்தைகளின் தாய்மாரை அடையாளம் காண்பதற்காக இரண்டு தாய்மார்களிடமும் மாதிரிகளை சேகரித்து டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் குழந்தைகள், தற்போது வைத்தியசாலை நிர்வாகத்தினரின் பராமரிப்பில் உள்ளன. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த சம்பவத்தன்று கடமையில் இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் சமூக வலைத்தலங்களில் குறித்த ஊழியர்களுக்கு கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.