Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
#HBD AR RAHMAN : இசைப்புயல்,ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்..!

SOORIYANFM GOSSIP - #HBD AR RAHMAN : இசைப்புயல்,ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

469 Views
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இன்று தனது 56ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.ஏ.ஆர் ரகுமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இளையராஜாவுடன் இசைபயணத்தை தொடங்கி பின்னர் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிய பெருமை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையே சாரும். இசையை நேசிக்கும் தந்தைக்கு மகனாகப் பிறந்த ஏ.எஸ்.திலீப்குமார் தனது 20 வயதில் இஸ்லாமிய மதத்தை மனப்பூர்வமாக தேர்ந்தெடுத்து,தனது பெயரை ஏ.ஆர்.ரகுமான் என்றும் மாற்றிக்கொண்டார்.


இசையில் மிகப்பெரிய நாயகனாக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.இந்திய துறைகளில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ள ஏ.ஆர். ரகுமான் தேசிய அளவிலும்,சர்வதேச அளவிலும் பல விருதுகளை குவித்திருக்கிறார்.


ரோஜா திரைப்படத்தில் வரும் “புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது” என்ற பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.ஏ.ஆர் ரகுமான் இதுவரையிலும் 6 தேசிய விருதுகள்,32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள் என பல விருதுகளை பெற்று இசை உலகத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.


எல்லோரையும் இசையால் கட்டிப்போட்டு எப்போதும் நம்மை துள்ளல் உற்சாகத்துடன் வைத்திருக்கும் இளைஞர்களின் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து சூரியனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top