ரஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் ஷாம் தளபதி விஜய் உடன் நடித்தமை தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது நான் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால் விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்தப் பணிவும் அன்பும் யாரிடமும் இல்லை.
அவர் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். 'வாரிசு' படத்தில் நடித்தது ஒரு குடும்பத்தில் வாழ்ந்தது போல் இருந்தது. 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
அதேநேரம் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படமும், அஜித் குமார் நடித்த 'துணிவு' திரைப்படமும் கிட்டத்தட்ட 480 திரையரங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.