Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
இலகுவாக செய்யலாம் காலிஃப்ளவர் பிரியாணி.!

sooriyanfm gossip - இலகுவாக செய்யலாம் காலிஃப்ளவர் பிரியாணி.!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

422 Views
மதிய உணவுக்கு ஏற்ற ஒரு சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

காலிஃப்ளவரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.

அத்தோடு இரத்த அழுத்த அளவை கனிசமாக மேம்படுத்துகின்றது.
மேலும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

இவ்வாறு பல்வேறு சத்துக்களை கொண்ட காலிஃப்ளவரில், பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : அரிசி - ஒரு கப், நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, கார்ன்ஃப்ளவர் - கால் கப், அரிசி மா - ஒரு தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, தனியாத்தூள் - அரை தேக்கரண்டி, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும். பின்பு கொதிக்கும் நீரில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்கவும்.

காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கார்ன்ஃப்ளவர், அரிசி மா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் எண்ணெய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுத்து அதில் நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top