Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
பளபளப்பான சருமத்திற்கு உதவும் இயற்கையான அழகுக்குறிப்புகள் !

Sooriyan FM Gossip - பளபளப்பான சருமத்திற்கு உதவும் இயற்கையான அழகுக்குறிப்புகள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

376 Views
சருமத்தைப்  பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு எளிமையான சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம். 


சிறிதளவு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, அதன் தோலை நீக்கிய பின்னர் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு கடலைமாவு, பசுப்பால், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு துணை புரியும்.

சிறிதளவு மஞ்சள் தூள், சந்தனம், பசுப்பால், பாதாம் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், மிதமான வெந்நீரால் கழுவி வர, சருமம் பொலிவாகக் காணப்படும்.

சிறிதளவு பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் முகத்தைக் கழுவி வர, சருமத்தில் காணப்படும் தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பிரகாசமாகக் காணப்படும்.

சிறிதளவு ஓட்ஸ், தயிர், தக்காளிப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வர, சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.

சிறிதளவு பாதாம் எண்ணெயுடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் கழுவலாம். இது சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்றி, சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளும்.

எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி, எமது சரும அழகை மேம்படுத்திக்கொள்வோம்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top