இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில் பின்னர் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமீபத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அதற்கு அடுத்து அஜித்தின் படத்தில் நடிக்க இருக்கிறார்.ஏற்கனவே உலக அழகி ஐஸ்வர்யாராய் அஜித் நடித்த "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.