Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த சிறந்த தீர்வு!

Sooriyan FM Gossip - கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த சிறந்த தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

578 Views
வாழைத்தண்டில் பலவித மருத்துவ நலன்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக வாழைத்தண்டை சமைத்தோ அல்லது சாறாகவோ உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்கழிவுகளை எளிதில் வெளியேற்றிக்கொள்ள முடியும்.

உடல் எடையைக் குறைத்துக்கொள்ள நினைக்கின்றவர்கள் வாழைத்தண்டுச் சாற்றினைத் தினமும் குடித்துவருவதன் மூலம் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் வாழைத்தண்டில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், வாழைத்தண்டுச் சாற்றினைக் குடித்துவருவதன் மூலம் எளிதில் உடல் எடையைக் குறைத்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பை வேகமாகக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டிற்குள்ளது. எனவே வாழைத்தண்டுடன் இஞ்சிச்சாற்றினைக் கலந்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

செரிமானப் பிரச்சினைகளினால் அவதியுறுவோர் வாழைத்தண்டினை சமைத்தோ அல்லது சாறாகவோ உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.

வாழைத்தண்டில் இரும்புச்சத்து மற்றும் Vitamin B6 ஆகியன அதிகளவில் உள்ளடங்கியுள்ளமையினால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்கின்றது.

வாழைத்தண்டானது உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவினைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றமையினால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.

தினமும் வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் வலுவடையும். அத்துடன் சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படாமலும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

வாழைத்தண்டில் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் வாழைத்தண்டினை சாப்பிட்டுவருவதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

வாழைத்தண்டினை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த ஆரோக்கிய நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top