Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
முதல் தடவையாக சீனாவின் சனத்தொகை வீழ்ச்சி

sooriyanfm gossip - முதல் தடவையாக சீனாவின் சனத்தொகை வீழ்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக சீனா காணப்படுகிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
2021ஆம் ஆண்டில் இருந்ததைவிட கடந்த 2022 ஆம் ஆண்டில் சீனாவின் சனத்தொகை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் சீனாவின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல் தடவையாகும்.

20222 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் சனத்தொகை 141,1750000 ஆக இருந்தது என சீனாவின் தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இது 2021 ஆம் ஆண்டைவிட 850,000 குறைவானதாகும். சீனாவில் கடந்த வருடம் பிறப்புக்களின் எண்ணிக்கை 9.56 மில்லியனாக பதிவாகியிருந்தது. இறப்புக்களின் எண்ணிக்கை 10.41 மில்லியனாக பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னர் இறுதியாக சீனாவின் சனத்தொகை 1960 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்தது. அதிக வறுமைக்கு மத்தியில் அப்போது சனத்தொகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது.

அதன் பின்னர் சனத் தொகையை கட்டுப்படுத்துவதற்காக 1980களில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மாத்திரம் என்ற கொள்கையை சீனா அமுல்படுத்தியது.

அதை மீறி குழந்தைகளை பெற்றுக்கொண்டால் சொத்துக்களை அரசு கையகப்படுத்திவிடும் என்றெல்லாம் பல விதமான சட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி இருந்தது.

தொடர்ந்து சனத்தொகை குறைவடைந்து வந்ததால் 2016 ஆம் ஆண்டு அந்த கொள்கையை சீனா முடிவுக்கு கொண்டுவந்தது. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு 3 பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கு பிறகும் சனத்தொகை வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அதிக எண்ணிக்கையான பெண்கள் வேலைக்கு செல்கின்றமை, உயர் கல்வியை நாடுகின்றமை ஆகியன சனத் தொகை வீழ்ச்சிக்கு காரணங்களாக உள்ளன என பலர் கூறுகின்றனர்.

சீனாவின் பாதுகாப்புத்துறை , சுகாதாரத்துறை , மருத்துவத்துறை என்று பல துறைகள் எதிர்காலத்தில் பாதிப்படைய கூடுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக சனத்தொகை கடந்த ஆண்டுதான் 800 கோடிகளை கடந்தது. உலகின் சில நாடுகளுக்கு சனத்தொகை வளர்ச்சி பெரும் பிரச்சினையாக இருக்கும் அதேவேளை சில நாடுகளுக்கு சனத்தொகை வளர்ச்சி குறைவாக இருப்பது பிரச்சினையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top