Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
சரும அழகை மேம்படுத்த உதவும் தக்காளிப்பழம்!

Sooriyan FM Gossip - சரும அழகை மேம்படுத்த உதவும் தக்காளிப்பழம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

326 Views
இயற்கையான முறையில் சரும அழகை அதிகரித்துக் கொள்வதற்கு  தக்காளிப்பழம் பெரிதும் உதவுகின்றது. எனவே தக்காளிப்பழத்தைக் கொண்டு எமது சரும அழகை எவ்வாறு மெருகேற்றிக் கொள்ளலாம் என்பதை இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம். 

தக்காளிப்பழத்தை பேஸ்ட் போன்று அரைத்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். தக்காளிப்பழத்தை சருமத்தில் பூசுவதனால், சருமம் பளபளப்பாகக் காணப்படும். அத்துடன் முகப்பருக்களையும், தழும்புகளையும் அழிக்கும் வல்லமை தக்காளிப்பழத்திற்கு உண்டு.

உருளைக்கிழங்கின் சாற்றுடன், தக்காளிப்பழத்தையும் அரைத்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்துகொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பொலிவாகக் காணப்படும்.

தக்காளிப்பழத்தின் சாற்றுடன் சிறிதளவு ரவை மாவைக் கலந்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பிரகாசமாகக் காணப்படும்.

தக்காளிப்பழத்தின் சாற்றுடன், சிறிதளவு வெள்ளரிக்காயின் சாறு, தேன் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு காயவைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, சருமத்தில் காணப்படும் முகப்பருக்கள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

தக்காளிப்பழத்துடன், சிறிதளவு ஒலிவ் எண்ணெயையும் கலந்து பேஸ்ட் போன்று அரைத்து, முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் கழுவ வேண்டும். இது சருமத்தில் காணப்படும் அழுக்குகளை நீக்க உதவுகின்றது.

தக்காளிப்பழத்தின் சாற்றுடன், சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, தயிர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் கழுவ வேண்டும். இது சருமத்தில் காணப்படும் அதிக எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளும்.

எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை மேம்படுத்திக் கொள்வோம்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top