புதினா ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு கீரை வகையாகும். புதினாவில் அதிகளவிலான மருத்துவ நலன்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக புதினாவில் Vitamin A, நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, பொஸ்பரஸ், கல்சியம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயற்படுகின்றது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடையச்செய்து வயிறு மற்றும் குடல்களின் செயற்பாடுகளை சீராக்குகின்ற தொழிற்பாட்டினை மேற்கொள்கின்றது.
வாய் சுகாதாரம் மேம்படுவதற்கு ஒரு சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக புதினா இருக்கின்றது. குறிப்பாக பற்கள் மற்றும் ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்க புதினா இலைச்சாறு உதவுகின்றது.
இதயத்துடன் தொடர்புடைய நோயினால் பாதிப்புறுவோர், புதினாவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த பலனை அடைந்துகொள்ள முடியும்.
வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும் பொழுது, புதினா இலைகளைச்சாப்பிட்டால் குமட்டல், வாந்தி ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ள முடியும்.
புதினா இலைகளில் ஏராளமான Vitamin A, Vitamin C சத்துக்கள் உள்ளடங்கியுள்ளமையினால், இவை சருமத்தை மேம்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
புதினா இலைகள் எமது உடலில் ஹீமோகுளோபினை அதிகரித்து மூளையின் செயற்திறனை ஊக்குவிக்கின்ற தொழிற்பாட்டினை மேற்கொள்கின்றது.
தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய சிறந்த நிவாரணியாகவும் புதினா இலை உள்ளது. பலவித மருத்துவ நலன்களைக் கொண்டுள்ள புதினா இலையை எமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நிறைவான ஆரோக்கிய நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.