அதேவேளை இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கார் விருதும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் எண்டிஆர், ராம்சரண், ஆலியாபட் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது.இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த ஹொலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் ராஜமௌலியை பாராட்டியுள்ளனர்.
அதாவது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் கீரவாணியின் தனித்துவமான இசை பற்றி வியந்து பேசிய ஜேம்ஸ் கேமரூன், தனது மனைவி ‘இவர் அந்த படத்தை முதன்முறையாக பார்த்தபோது குழந்தையை போல உணர்ந்ததாகவும் தொடர்ந்து இரண்டு முறை படத்தை பார்த்தார்” என்றும் கூறுயுள்ளார். மேலும் ஹொலிவுட்டில் திரைப்படம் இயக்க விருப்பமிருந்தால் சந்தித்து பேசலாம் என்றும் ராஜமௌலியிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து இயக்குனர் ராஜமௌலி ஹொலிவுட் திரைப்படம் இயக்குகிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகின்ற நிலையில் ராஜமௌலி இவ்வாறு கூறியுள்ளார்.அதாவது 'நான் இந்தியாவில் படம் எடுப்பதென்றால் சர்வாதிகாரி போன்றவன், யாரும் எதுவும் எனக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் ஹொலிவுட்டில் படம் எடுப்பதென்றால் நான் யாருடனாவது கூட்டணி வைத்து தான் படம் இயக்க வேண்டி இருக்கும்" என தெரிவித்துள்ளார்.