Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
கணவனை சுட்டுக்கொன்ற மனைவி

Sooriyan FM Gossip - கணவனை சுட்டுக்கொன்ற மனைவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

201 Views
உலக அளவில் அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் நாடக ஐக்கிய அமெரிக்கா காணப்படுகிறது. நேற்றும் அங்கு ஒரு மிகப்பெரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கலிபோர்னியாவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கணவனை, மனைவி துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதான கணவனை 76 வயதான மனைவி திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியசாலையில் இருந்த சகலரும் அதிர்ச்சியடைந்து தப்பியோடியுள்ளனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். குறித்த சம்பவத்தில் வேறு யாருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

பொலிஸார் நடத்திய விசாரணையில், உடல்நலம் குன்றிய முதியவரும், அவரது மனைவியும் 3 வாரங்களுக்கு முன்பே இது குறித்து உரையாடல் நிகழ்த்தியுள்ளனர்.

உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்ததால் முதியவர் தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால் அவரால் முடியாத காரணத்தால் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக செயல்பட்ட பொலிஸார் குறித்த மூதாட்டியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top