குறட்டை, சுவையான உணவை சமைத்துக்கொடுக்காமை என்ற காரணங்களினால் விவாகரத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தன்னுடன் கணவன் சண்டை போடுவதில்லை என்ற காரணத்தினால் அண்மையில் சவூதி அரேபியாவில் விவாகரத்து ஒன்று கோரப்பட்ட சம்பவமும் பதிவானது.
இவ்வாறான நிலையில் ஒரு பெண் தனது கணவர் தன்னை விவாகரத்து செய்தால் அவர் விவாகரத்து செய்யும் ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளுக்குத் தேவையான மொத்த செலவையும் அப்பெண்ணுக்கு பணமாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளதுடன் இதற்கு அந்த பெண்ணின் கணவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
குறித்த பெண்,நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் தற்போது குடும்பத்தினை பராமரிப்பதற்காக தனது வேலையை இராஜினாமா செய்து முழுநேர இல்லத்தரசியாக இருந்துவருகின்றார். இந்த நிலையில் தனது கணவரிடம் தனது நிபந்தனைகளைக் கூறி சட்டத்தரணியினூடாக ஒப்பந்தமாகவும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் பிரதியினை குறித்த பெண் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதுடன் அவை தற்போது வைரலாகியுள்ளன.