நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஃபஹத் ஃபாசில்,விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படமான தளபதி 67 படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின் முதல் அப்டேட் இம்மாதம் 26 ஆம் திகதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது படத்தின் டைட்டிலாக அல்லது ப்ரமோஷன் வீடியோவாகா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில்,ஃபஹத் ஃபாசிலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் "தங்கம்" படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது தளபதி 67 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஃபகத் ஃபாசில்,நான் படத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருப்பது இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியிருக்கிறது.
தளபதி 67 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில்,
ஃபகத் ஃபாசில் தளபதி 67 படத்தில் நடிப்பது உறுதியா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.