1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் எனும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் E. ராமதாஸ்.தமிழில் ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.
சில தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கி சட்டை, மெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இவரின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.