மஞ்சள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது. அத்துடன் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கின்ற தொழிற்பாட்டையும் மேற்கொள்கின்றது.
மஞ்சளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்பிலிருந்து எளிதில் விடுபட முடியும். அத்துடன் நீரிழிவுநோயின் தாக்கத்திலிருந்தும் விடுபட முடியும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மஞ்சளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பினைக் குறைப்பதில் மஞ்சளின் பங்கு அளப்பரியதாகும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள மஞ்சள் ஒரு அற்புதமான இயற்கைப் பொருளாகும், ஏனெனில் இது மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகளின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றது.
இரைப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் மஞ்சள் உதவுகின்றது. அத்துடன் அஜீரணம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் உதவிபுரிகின்றது.
முகப்பருக்களை நீக்குவதற்கும் மஞ்சள் உதவுகின்றது. பாலில் மஞ்சளை சேர்த்துக் குடித்து வந்தால் உடலில் இரத்தம் சுத்தமாகுவதோடு இதயநோயின் பாதிப்பிலிருந்தும் விடுபட முடியும். பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ள மஞ்சளை எமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.