தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் கடந்த 11 ஆம் திகதி வெளியான 'துணிவு' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்று இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.
அதேவேளை 'சதுரங்கவேட்டை' மற்றும் 'தீரன்' ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் எச். வினோத், 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' என்று அஜித்தோடு வரிசையாக மூன்று திரைப்படங்களை இயக்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்கிறார்.
இதேவேளை இந்த திரைப்படத்தில் ஜிப்ரானின் இசையில் இடம்பெற்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் துணிவு திரைப்படத்தில் பயன்படுத்தாத இன்னும் 5 இசைக் கோர்வை துண்டுகள் உள்ளதாகவும், விரைவில் அவை வெளியாகும் என்றும் முன்பு இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியிருந்தார். அதேவேளை தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மற்றும் இடம் பெறாத 33 இசைக் கோர்வை துண்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்துள்ளார்.