இது கிரிக்கெட்டில் சாத்தியமே இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் இந்த அரிதான சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஜோயல் பாரிஸ் பந்துவீச்சில் இந்த மைல்கல்லை ஸ்மித் எட்டியுள்ளார். அந்த போட்டியின் இரண்டாவது ஓவரை பாரிஸ் வீச வந்தார்.
அப்போது துடுப்பாட்ட முனையில் ஸ்மித் இருந்தார். முதல் இரண்டு பந்துகளிலும் ஓட்டங்கள் எதுவும் பெறப்படவில்லை. ஜோயல் பாரிஸ் வீசிய மூன்றாவது பந்தில் ஸ்மித் ஆறு ஓட்டமொன்றை பெற்றுகொடுத்தார். அதேநேரத்தில், பந்துவீசும் போது பந்து வீச்சாளர், கிரீசுக்கு வெளியே சென்றதை உறுதிப்படுத்திய நடுவர், அதை நோ-பால் என்று அறிவித்தார்.
அதாவது, அந்த ஓவரில் இதுவரை வீசப்படாத மூன்றாவது பந்தில் ஸ்மித் 7 ஓட்டங்களை சேர்த்திருந்தார். அடுத்த பந்தை ஃப்ரீ ஹிட்டாக வீச வேண்டியிருந்தது.
இந்த பந்தை அவர் வைடாக வீச, அது விக்கெட் காப்பாளரை தாண்டி ஃபைன் லெக் திசையில் நான்கு ஒட்டமானது.இதன் மூலம் 5 ஓட்டங்கள் கிடைத்தன.
அதுவரை வீசப்படாத மூன்றாவது பந்தில் ஸ்மித் 12 ஓட்டங்களை சேர்த்திருந்தார். இதனால், அடுத்த பந்தும் ஃப்ரீ ஹிட்டாக அமைந்தது. அந்த பந்தில் ஸ்மித் நான்கு ஓடடமொன்றை விளாசினார்.
இப்படித்தான், கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 16 ஓட்டங்களை ஸ்மித் சேர்த்தார். இந்த ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் 33 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் , 6 சிக்சர்களுடன் 66 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.
அவரது அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ஓட்டங்களை குவித்தது. இந்த இலக்கை துரத்திய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியால் 156 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.
சிட்னி சிக்சர்ஸ் அணி ஸ்டீவன் ஸ்மித்தின் அதிரடியால் இலகுவாக வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.