வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "வாரிசு". கடந்த 11ம் திகதி இரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான "வாரசுடு" கடந்த 14ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
"வாரிசு" திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாரிசு திரைப்படம் வெளியாகிய 11 நாட்களில் 250 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.