எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிதளவு தேன், தயிர் ஆகியவற்றை சேர்த்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தில் காணப்படும் கருமையை நீக்கி, சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளும்.
சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தில் காணப்படும் அழுக்குகளை நீக்கி, பிரகாசமான சரும அழகைத் தருகின்றது.
வாரத்தில் இருமுறை தேங்காய் தண்ணீரைக் கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவுவதால், முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
தூங்குவதற்கு முன்னர் சூரியகாந்திப்பூவின் விதையை பசுப்பாலில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சிறிதளவு குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள், ஊறவைத்த பசுப்பால் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இது எமது சரும நிறத்தை அதிகரிக்க துணை புரிகின்றது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை மேம்படுத்திக் கொள்வோம்.