அதிலும் குறிப்பாக , கிராமப்புற கல்வி மேம்பாடு என்பது ஒரு நாட்டின் வறுமை ஒழிப்பிற்கான முதுகெலும்பாக காணப்படுகிறது. ஆனாலும் ஒரு சில கிராமங்களில் மாத்திரமே கல்வியின் தேவையை உணர்ந்து மக்கள் செயல்படுகின்றனர். இன்னும் சில கிராமப்பகுதிகளில் தங்களின் குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக அமைந்து விடுகிறது.
இந்த நிலையில் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும்படியாக இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள பாடசாலை ஒன்று ஒரே ஒரு மாணவனுக்காக மாத்திரம் இயங்குகிறது.
மகாராஷ்டிராவில் கணேஷ்பூர் வாஷிம் மாவட்டத்தில் 150 பேரைக் கொண்ட மிகவும் சிறிய இந்த கிராமத்தில் தரம் ஒன்று முதல் தரம் நான்கு வரையான வகுப்புக்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் , ஒரே ஒரு மாணவர் மட்டுமே இதுவரையில் பாடசாலைக்கு சேர்ந்துள்ளதுடன் அவருக்கு கற்பிப்பதற்காக ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியர் , குறித்த மாணவனுக்கு கற்பிப்பதற்காக தினமும் சுமார் 12 கிலோமீட்டர் பயணம் செய்வதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வருடங்களாக இந்த பாடசாலையில் இந்த மாணவர் மட்டுமே கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் மதிய உணவு உட்பட அரசாங்கத்தினால் வழங்கப்படும் சகல விதமான நலத்திட்டங்களும் அந்த மாணவருக்கு கிடைப்பதாகவும் அரச விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 10.30 மணி முதல் 12 மணிவரை பாடசாலை நடைபெறுவதாகவும் அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்