Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
முருங்கை பூ ரசம் ...!

sooriyanfm gossip - முருங்கை பூ ரசம் ...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

131 Views

முருங்கைக் கீரையில் விட்டமின் A, B, C சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு,போன்ற சத்துக்கள் உள்ளன.

முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றது. மேலும் முருங்கை இலைச் சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும் தன்மை கொண்டது.

அத்தோடு குழந்தையின்மை பிரச்சனைக்கும் முருங்கை இலை உதவுகின்றது. இன்று பல மருத்துவக் குணங்களை கொண்டுள்ள முருங்கை பூவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு தக்காளி - 1 நெல்லி அளவு - புளி பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகு - 1/2 தேக்கரண்டி பூண்டு - 5 பல் சீரகம் - 1 தேக்கரண்டிவெந்தயம் - 1/4 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது உப்பு , எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை 1/2 லீட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் பொடித்த சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்க்கவும். ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

ரசத்தை கொதிக்க விடாமல் இறக்கினால் சத்தான முருங்கை பூ ரசம் தயார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top