இயற்கையான முறையில் எமது சரும அழகை மேம்படுத்திக் கொள்வதற்கு பால் பெரிதும் துணை புரிகின்றது. எனவே பாலைக் கொண்டு எமது சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி, இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
பாலுடன் சிறிதளவு பன்னீரைக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
சிறிதளவு ஓட்ஸ் தூளுடன், பாலையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்து வருவதனால் சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
சுத்தமான தேனுடன் சிறிதளவு பாலைக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் வசீகரமாகக் காணப்படும்.
பப்பாளிப்பழத்தை பேஸ்ட் போன்று அரைத்து, அதனுடன் சிறிதளவு பாலையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தில் காணப்படும் கருமையை நீக்கி, பொலிவான சரும அழகைத் தருகின்றது.
கரட்டை அரைத்து அதன் சாற்றுடன் சிறிதளவு பாலையும் கலந்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தைப் பிரகாசமாக வைத்துக்கொள்ளும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை மேம்படுத்திடுவோம்.