Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
'ஏகே 62' படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன்! வெளியான பரபரப்பு காரணம்!

SOORIYANFM GOSSIP - 'ஏகே 62' படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன்! வெளியான பரபரப்பு காரணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,828 Views

அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக இருந்த,ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக விலகியுள்ளதாக,பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் ஜனவரி 11ஆம் திகதி,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'துணிவு'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம்,இரண்டு வாரங்களைக் கடந்தும்,ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று,இந்தியாவில் மட்டும் இன்றி உலகளவிலும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இன்னும் சில தினங்களில் 300 கோடி வசூலை எட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.துணிவு படத்தின் வெற்றி அஜித் மற்றும் இயக்குனர் ஹெச் வினோத்,ஆகியோரை,உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில்,இருவருமே தங்களின் அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளனர்.


அதன்படி ஏற்கனவே வெளியான தகவலில்படி,இயக்குனர் எச்.வினோத் கமல்ஹாசனை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும்.அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.


ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக செய்தி வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில்,தற்போது (#JusticeforVigneshShivan) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.ஆனால்,இந்த தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top