தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணாவின் ;பத்துதல' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளிவர உள்ளது.
இதற்கிடையில் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விலகியுள்ளதாகவும் வேறு திரைப்படத்தில் நடிக்க அவர் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் 'கொரோனா குமார்' திரைப்படத்தில் சிம்புவுக்குப் பதிலாக யார் நடிப்பார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் 'லவ் டுடே' திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க இயக்குனர் கோகுல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.