ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பில் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வருடம் நடிகர் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் , தனது மகன் திரைப்படத் துறையில் நுழைய விரும்புவதாகவும், ஏற்கனவே தென்னிந்தியத் திரைப்படத் துறையின் சிறந்த இயக்குநர்களிடமிருந்து பயிற்சிகளைப் பெற்று வருவதாகவும் கூறினார்.
தற்போது தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் குறும்பட இயக்குநராக பணியாற்றி வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் குறும்படம் ஒன்றினை இயக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த பதிவினை தளபதி இரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் ஜேசன் விஜய் தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரைப் போன்று புகழ்பெற்ற இயக்குநராக வலம்வருவார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து ஜேசன் சஞ்சய் நடனமாடியிருந்ததுடன் விஜய் சேதுபதியை வைத்து தனது முதலாவது திரைப்படத்தை ஜேசன் இயக்குவார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.