இயக்குனர் ராஜு துசா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'.
இந்த திரைப்படத்தை ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். குறைந்தபட்ச வசனங்களுடன் ஒரேயொரு கதாபாத்திரத்தை வைத்து, ஒரே ஷொட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்தை ஒரே ஷொட்டில் சுவாரஷ்யமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து முதல் பிரதிக்கு தயாராகிவிட்டது.
சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க கிஷோர் பாய்தாபு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்' திரைப்படத்தின் முன்னோட்டத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளிலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.