பாதங்கள் அதிக வறட்சியுடன் காணப்படின், அவை நாளடைவில் பாத வெடிப்புக்களாக மாறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே எமது பாதங்களை எவ்வாறு மென்மையாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி, இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சம் பழத்தோலை பாதங்களில் வைத்து நன்கு மசாஜ் செய்த பின்னர், மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவி வர, பாதங்கள் மென்மையாகக் காணப்படும்.
எப்போதும் தரமான பாதணிகளை அணிய வேண்டும். தரமற்ற பாதணிகளைப் பயன்படுத்துவதால், எமது பாதங்கள் வறட்சியடையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
வெளியில் சென்று வீடு திரும்பும் போது, பாதங்களை சுத்தமாகக் கழுவிய பின்னர் தேங்காய் எண்ணெயைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்யலாம். இது பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
சிறிதளவு பன்னீருடன் மஞ்சளையும் கலந்து பாதங்களில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் பாதங்களைக் கழுவி வர, பாதங்கள் மென்மையாகக் காணப்படும்.
வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் பூசி நன்கு தேய்த்த பின்னர் மிதமான வெந்நீரால் கழுவி வர, பாதங்கள் மென்மையாகக் காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்வோம்.