இந்த நிலையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பிரபலமான தனியார் பீட்சா நிறுவனம் ஒன்று யூடியூபர் ஒருவருடன் இணைந்து உலகின் மிகப்பெரிய பீட்சாவைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அந்த பீட்சா நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் இணைந்து 14000 சதுர அடி பரப்பளவில் பீட்சாவை தயாரித்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். இந்த பீட்சாவை தயாரிக்க 2244 கிலோ சோஸ், 630,496 பெப்பரோனிஸ், 3990 கிலோகிராம் சீஸ் மற்றும் 6192 கிலோ மா என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வளவு பெரிய பீட்சாவை சமைக்க ஒரு தனி சாதனத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அந்த இயந்திரம் பீட்சாவின் மீது முழுவதுமாக நகர்ந்து,வேகவைத்துள்ளது.
14000 சதுர அடி பரப்பளவில் செய்யப்பட்ட இந்த பீட்சாவை சுமார் 68000 துண்டுகளாக வெட்டி அங்குள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு கடந்த 2012 ஆம் ஆண்டு, இத்தாலியின் சமையல்கலை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட பீட்சாவின் மொத்த பரப்பளவு 13580 சதுர அடி என்பதுடன் அந்த சாதனையே தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.