Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
நான் 90 சதவீதம் குணமடைந்து விட்டேன் - விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு

SooriyanFM Gossip - நான் 90 சதவீதம் குணமடைந்து விட்டேன் - விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

299 Views

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'ரத்தம்', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அந்தவகையில்,விஜய் ஆண்டனியின் ஹீரோ பயணத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்தது பிச்சைக்காரன்.இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வெற்றி அடைந்தது.
 
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'பிச்சைக்காரன் 2' படத்தை தயாரிப்பதோடு இயக்கி,நடித்து, இசையமைத்து வருகிறார் விஜய் ஆண்டனி.இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில்,மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த விஜய் ஆண்டனி,நலமாக இருப்பதாக படக்குழுவினரும் இயக்குநர் சுசீந்திரனும் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து விஜய் ஆண்டனி,ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து அந்த காயத்திலிருந்து பத்திரமாக மீண்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ,உடல் நலம் குறித்து மீண்டும் ஒரு உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்தப் பதிவில், "நான் 90% குணம் அடைந்து விட்டேன்.உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.என்னமோ தெரியவில்லை,நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்.வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன்-2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் 'விரைவில் குணமடைய வாழ்த்துகள்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top