இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த மொடல் அழகி ஒருவர் தன்னை போலவே உருவம் அமைப்பைக் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மொடல் அழகி ஷஹ்ரபான் கே என்பவர் இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி மிகவும் பிரபலமாககிவந்தார்.
இந்நிலையில் அவர் திடீர் என்று காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் பொலிசில் முறைப்பாடு செய்தனர்.
அதன் பிறகு இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் ஷஹ்ரபானின் காரை பொலிசார் கண்டுபிடித்தனர். காருக்குள் இருந்த சடலம் அச்சு அசலாக ஷஹ்ரபான் போலவே இருந்ததால் அது அவர்தான் என அவரது பெற்றோரும், காவல்துறையினரும் நம்பினர்.
பிரேத பரிசோதனையில் காருக்குள் சடலமாக கிடந்தது ஷஹ்ரபான் அல்ல என்பது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்ந மற்றொரு மொடல் அழகியான கதீட்ஜா ஓ என்பதும் தெரியவந்தது.
ஷஹ்ரபான் குடும்ப பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்து, அதற்கு தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், பொலிசாரையும் நம்ப வைக்க அவர் திட்டம் போட்டுள்ளார்.
ஷஹ்ரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடிக்கொண்டிருந்த போதுதான் மொடல் அழகி கதீட்ஜா, ஷஹ்ரபானின் வலையில் சிக்கினார்.
கதீட்ஜாவுடன் இன்ஸ்டாகிராமில் சகஜமாக பேசி பழகிய ஷஹ்ரபான் அவருக்கு அவ்வப்போது அழகுசாதன பொருட்களை வழங்கி வந்தார்.
ஒரு நாள் அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிரும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர்.
முகம் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஷஹ்ரபான், கதீட்ஜாவின் முகத்தில் 50க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்துள்ளார்.
சினிமாவை மிஞ்சும் இந்த பதபதைக்கும் கொலை சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, ஷஹ்ரபானையும், அவரது காதலரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.