தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் 2018-ஆம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.
படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான அவர் பெண் தெருக்கூத்து கலைஞராக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடுகட்டி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.