பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் இருந்தால், அதுவே தனித்துவமான அழகைக் கொடுக்கும். எனவே இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில், கூந்தலை எவ்வாறு அடர்த்தியாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டையின் வெள்ளைக்கருவை கூந்தலில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிப்பதனால் கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கை தண்ணீரில் வேகவைத்து அந்த நீரைக் கொண்டு கூந்தலில் மசாஜ் செய்த பின்னர் குளிப்பதனால் கூந்தல் அடர்தியாகக் காணப்படும்.
வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை எடுத்து தலையில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிக்கலாம். இது எமது கூந்தலை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்ளும். அத்துடன் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெயை மிதமாக சூடேற்றி கூந்தலில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிப்பதனால் கூந்தல் அடர்த்தியாக இருக்கும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது கூந்தலைப் பாதுகாப்போம்.