இந்த திரைப்படத்தில் ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டிருந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை இரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் OTT வெளியீட்டு திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் இம்மாதம் 8 ஆம் திகதி நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.