திருமணத்திற்கான உடைகள் மற்றும் சிகை, முக அலங்காரங்களைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு முறையாக அவற்றை செய்கிறார்கள்.
இந்த நிலையில் பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக தனித்துவமான சிகையலங்காரத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
இவரின் இந்த சிகையலங்காரத்திற்கு வழமையாக பயன்படுத்தப்படும் பூக்கள் மற்றும் இதர பொருட்களைப் பயன்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள சொக்லேட் மற்றும் இனிப்பு டொபி வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூந்தல் , நெற்றிச்சுட்டி, ஒட்டியாணம், ஜிமிக்கி என சகலவிதமான அலங்காரத்திலும் சொக்லேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு இந்த அலங்காரங்களை செய்த ஒப்பனையாளரின் இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அவை சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.