மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த திரைப்படத்தின் டைட்டிலை விக்ரம் பட பாணியில் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.வெளியான புரோமோ சில மணி நேரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.