பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதுடன்,வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு அண்மையில் தாயானார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகை நயன்தாரா.கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது,கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது அதோடு இந்த நேரத்தில் நாம் யாருடன் பழகுகிறோம் என்பது முக்கியமானது,நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும்.கெட்ட நண்பர்களுடன் சேர்ந்தால் உங்கள் வாழ்க்கையே கெட்டுவிடும்.
இந்த நாட்களில் எடுக்கும் முடிவுகள் தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.வெற்றியை அடையும் போது பணிவாகவும்,நிதானமாகவும் இருக்க வேண்டும்.
கல்லூரி நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கலாம்,ஆனால் அதே நேரத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தினமும் 10 நிமிடங்களையாவது அவர்களுக்காக ஒதுக்கி அவர்களுடன் செலவழியுங்கள்.இது உங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அந்த மகிழ்ச்சி உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும்'' என அறிவுரை கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.