தெலுங்கின் பிரபல இயக்குநராக வலம் வரும் வெங்கி அட்லூரி தற்போது இயக்கி உள்ள திரைப்படம் வாத்தி.இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் அதேவேளை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் இம்மாதம் 17ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வாத்தி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது.
மேலும் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.