பொதுவாக முருங்கைக் கீரையில் பொரியல், சுண்டல் போன்றவற்றை தான் நாம் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிகமாக செய்து கொடுப்போம். இதை பெரும்பாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவது கடினம் தான் அதனால் அதனை கொஞ்சம் வித்தியாசமாக பக்கோடாவாக செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் - கடலை மா - 200 கிராம், வெங்காயம் - 50 கிராம், முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, நெய் - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை - முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய், சிறிதாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சீரகம், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக மா கலவை உதிரியாகும் வரை நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுத்தால் சூப்பரான சத்து நிறைந்த முருங்கைக் கீரை பக்கோடா தயார்.