யுவன் சங்கர் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அவரும் இளையராஜாவும் இணைந்து இசையமைத்திருந்தனர். காயத்ரி,குரு சோமசுந்தரம்,ஷாஜி சென் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
“மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..!" என ஏராளமான பிரபலங்கள் படக்குழுவிற்கு வாழ்த்தியிருந்தனர்.தொடர்ந்தும் இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்து வருகின்றது.
இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதினை பெற்றுள்ளது.அமெரிக்காவில் நடைபெற்ற 29 ஆவது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் படக்குழுவினருக்கு தொடர்ந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.