2019 ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன்.இப்படத்தில் மஞ்சு வாரியர்,அம்மு அபிராமி,ஆடுகளம் நரேன் ,பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.
இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் தேடி வந்தன. இந்நிலையில் அண்மையில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில், தற்போது நடிகை மஞ்சு வாரியரின் பதிவொன்று வைரலாகி வருகிறது. நடிகை மஞ்சு வாரியர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், புடவை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'சேலை என்பது வெறும் ஆடையல்ல. அது ஒரு மொழி' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.